Popular Posts

Friday, September 24, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”காதல்மொழியாலே!””

கதிரவனே கதிரவனே இன்னும் உதயமாகவில்லையே!-இன்ப
மோகனமான இருள் உன்னையே தழுவுகின்றதே!
காதலான திரைதான் உன்னை என்னுள் ஆக்குகின்றதோ?
உன்
வதனத்திலும் உன்கண்களிலும் உறக்கத்திலும் விழிப்பினிலும்
வந்து சேர்ந்த அன்பின் அமைதியிலும் என்னசாந்தி என்னசாந்தி?
இந்த வசந்தமான இளமையான அதிகாலையில் தடுமாறும் என்வார்த்தைகளில்
அந்த தென்றல் இழைந்தோடும் அருவி நீரின் சலசலப்பிலும் என்கவிதையே!

இளையவளே இனியவளே! அன்புக்கு உரியவளே! என் துணையானவளே!-உனக்கேற்ற
இளையவனே சிறந்தவனே நல்லவனே நான் தான் அல்லவா?
உன்னிதயத்தில் ஒலிக்கின்ற பருவத்தின் இலக்கியமல்லவா?
உனது கனிந்த குளுமையான பார்வையிலே அன்பே நீயும்
என்னையே ஒருபோது திரும்பி பார்த்திடவே மாட்டாயோ?
உலகமெங்கும் ஒரேமொழி உண்மைபேசும் காதல்மொழியாலே!

No comments: