Popular Posts

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_மழையே!உன்னில் எனது கால்களும் தோய்ந்து தோய்ந்து நனைந்து நனைந்து ஓர் சங்கீதம்தான் பாடியதோ?-அதுவும் ஏழுசுரத்தினையும் :

மழையே!தூவும் கலையே!
உன்சாரல் தூரல் தன்னிலே!- மழையே!உன்னில்
எனது கால்களும் தோய்ந்து தோய்ந்து நனைந்து நனைந்து
ஓர் சங்கீதம்தான் பாடியதோ?-அதுவும்
ஏழுசுரத்தினையும் தான் மிஞ்சியதோ?
ஓர் தியானத்திலே
என்னையே ஏதோ ஓர் இன்பந்தன்னிலே!
அமிழ்ந்து போகச் செய்திடும் மழையே நீ ஒரு ஞானியே!-உன்
ஈரத்தின் நுண்கால்களிலே மென் உணர்வுகளிலே!உன்சாரல் தூரல் தன்னிலே
மழையே!உன்னில்
எனது கால்களும் தோய்ந்து தோய்ந்து நனைந்து நனைந்து
ஓர் சங்கீதம்தான் பாடியதோ?-அதுவும்
ஏழுசுரத்தினையும் தான் மிஞ்சியதோ?
சன்னல் கதவுகளையே மின்னல் வெளிச்சமே தட்டிப் பறித்திட துணிந்ததோ?- அந்தோ!
அந்த நீலவானத்தையும் மழையே நீயும் மறைத்திட விழைந்தாயோ?

No comments: