தானொரு நாள்வாழ்ந்தாலுமே-ஈசல் குஞ்சுகளே
தளராதத் தத்துவமாய் வாழ்ந்தனவே!-தம்முயற்சியினாலே!
தன்னம்பிக்கையாலே !
மீண்டும் மீண்டும்
ஓடிஓடிப் பறந்தனவே!-மானிடர்க்கோ!-எத்தனைமுறை
வீழ்ந்தாலும் எழுந்து நிற்கும் சூட்சுமத்தை சொல்லித் தந்தனவே!
அந்திவேளை இது
ஆரஞ்சு ஒளிக்கோடுகளாய்
கூட்டம் கூட்டம் கூட்டமாய் இறகுகள் மினுங்கவே!
நூற்றுக் கணக்கினில் ஈசல் குஞ்சுகளே!-சுயமாய்
தாங்களும் பறந்திடவேண்டி
ஆகாயம் தேடிப் பறந்து போயினவே!-ஆனாலும்
பூமிதன்னில் சோர்ந்து வீழ்ந்தனவே!
சோர்ந்து வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் ஓடிப் பறந்தனவே!
தானொரு நாள்வாழ்ந்தாலுமே-ஈசல் குஞ்சுகளே
தளராதத் தத்துவமாய் வாழ்ந்தனவே!
மீண்டும் மீண்டும்
ஓடிஓடிப் பறந்தனவே!
No comments:
Post a Comment