என்மனசே என்மனசே!
ஒத்தையடி பாதையையும் மறந்துட்டியா>--அந்தகுளிர்
வேப்பமர நிழலையும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
என்னத்தமக போட்டுவச்ச அழகான
பரங்கிப்பூ வெச்சபச்சரிசி கோலத்தையும் மறந்துட்டியா?>
என்மனசே என்மனசே-என்னாசை
அத்தமகள காணப்போன கொல்லையிலே
தும்பப்பூவ உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சியையும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
காலமெல்லாம் காதுல ரீங்காரம் பண்ணுகின்ற- நம்ம
நாட்டுப்புறப் பாட்டையுந்தான் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே-
நானொருபக்கம் அவளொருபக்கம் உச்சிகுளிரும்
ஓடை நீரு குளியலையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
அந்தக் குளத்து நீருல மழைவிழுகின்ற
அழகும் கொப்புளச் சத்தத்தையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
ஆடும்கம்பால் கொல்லைவிட்டுப் பறந்திடும்
காட்டுப் பறவைகளின் குரலோசையும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
அசையும் சிலந்தி வலையிலும் அழகுசெய்யும்
இளம்பனித் துளியைப் பார்த்ததையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
கருப்பசாமி கோவில் திருவிழாக் கொண்டாட்டம்-அந்த
வழுக்கை மண்டைத் தாத்தா கிண்டலுந்தான் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
என்னதான் வருமானம் என்றாலுமே இழந்துபோன-பெரிதான
அந்தகிராமத்து சுகங்களையும் தான் நீயும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே!
No comments:
Post a Comment