Popular Posts

Monday, June 29, 2009

அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த இனியவர்களை மக்களும் தேடிசெல்லவேண்டுமே! என்றும் கூடிவாழ்ந்திட வேண்டுமே!!

கண்ணும் காதும் இல்லை என்றாலும்
உங்களுக்கு கருத்துண்டு எறும்புகளே!
தொடு உணர்வு,வாயுணர்வு,மூக்குணர்வு
உங்களுக்குண்டு
சுறுசுறுப்பினில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்
இனிப்பைக் கண்டால் துடிப்புடன் படையெடுப்பீர்கள்
நீங்கள் என்றைக்கும் மனிதரைப் போல ஒரு நாளும்
நீண்டவரிசையை முந்திச் சென்றதில்லையே!
உங்கள் பாதையில் வடுத்தெரியும்
உங்கள் உழைப்பினில் வடுவில்லையே!
நீங்கள் ஊர கல்லும் தேய்ந்திடுமாமே!
நீங்கள் தேடும் உணவை அளவோடு உண்டு-எஞ்சியதை
சேமித்துவைத்து மழைகாலத்தில் உண்டுவாழ்ந்து மகிழ்வீர்கள்!
சேமிப்பின் பயனை மனிதரை உணரவைத்தீர்கள்
உங்கள் தொடு உணர்வினாலே மழைவருகை சொல்வீர்களே!
நீங்க சேமித்த அரிசிதனை பாலை நிலந்தன்னில்
சங்ககாலத்தில் சமைத்து உண்டார்களாமே!-அதையும்
புல்லரிசி என்றுகூட சொன்னார்களாமே!
உங்களைப் போலவே மக்களும்
சுறுசுறுப்பை கற்றுக்கொள்ளவேண்டுமே!
சிக்கனமாய் வாழ்ந்திடவே சேமிக்கும் குணம்வேணுமே!
இனிப்பைத்தேடும் உங்களைபோலவே
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த இனியவர்களை
மக்களும் தேடிசெல்லவேண்டுமே!
என்றும் கூடிவாழ்ந்திட வேண்டுமே!

No comments: