கல்வி என்பது யாரும் பிச்சை போட்டு பெறுவது அல்ல!.
கல்வி என்பது நமது அடிப்படை உரிமை அல்லவா?
கல்வியை வியாபார நோக்கினில் பார்க்கின்ற கொடுமையை அழிக்காமலே!
கட்டணக் கொள்ளையை தடுக்காமலே !
எவருக்கோ வந்தது என்று நாமும் தூங்கி விட்டால்…
இங்கு தொடரும் தற்கொலை மனநிலை ,தாழ்வுமனப்பான்மை எல்லாமே
எவர்தான் வந்து மாற்றுவாரோ?
போராடாமலே நமக்கு விடிவுவரும் என்பது பழைய பஞ்சாங்கம் அல்லவா?
தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு இந்த சமூகத்தில்
தன்மானத்தோடு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை! வசந்தமும் இல்லை இல்லையே
அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டாமலே! - நாம் அனைவரும்
வீதியில் இறங்கி போராடாமலே !
இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம் என்பது கானல் நீர் கனவாகுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment