Popular Posts

Friday, November 6, 2009

கரும்பினைக் கண்டு கொண்டென் உன் இதழினிலே காதலியே ! கண்ணிணை களிக்கு மாறே கண்பாவை அசைப்பதுதான் ஏனோ? அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமானவளே!

கரும்பினைக் கண்டு கொண்டென் உன் இதழினிலே காதலியே !
கண்ணிணை களிக்கு மாறே கண்பாவை அசைப்பதுதான் ஏனோ?
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமானவளே!
ஆனந்தபூர்த்தியான தேவதையே!உனது இயற்கையாம்!
அழகோடு நிறைந்ததெது? தன்னன்பு வெளிக்குளே நேயமாய்!
எழிலாக மறைந்ததெது? வாழ்வினிலே பேரின்பமாய் !
உயிர்க்குயிராய் நம் உள்ளத்தில் தழைத்ததெது? காதல் பேரின்பமல்லவா?அதுவே

நம் கருத்திற்கிசைந்ததுவே!அத்தோடு
நாட்டோர் போற்றுகின்ற பகிர்ந்துண்ணும் தத்துவத்தை
கண்டுஇணைத்து நாமும் எல்லோரும் வாழுகின்ற பொன்னாளை உருவாக்கும்
வழிசெய்குவாம்!.

No comments: