கடலென்ற உலகமீதில் அலையாகி அலைகின்றோம்!
கனவென்று வாழ்வைநம்பிக்,காலமெல்லாம் கழித்துவிட்டோம்
காற்றென்ற மூவாசை மந்திரச் சுழலிலே சிக்குண்டு தவித்து நின்றோம்
காதலாலே கட்டுண்டு நித்த நித்தம்,காத்திருந்து நொந்துபோனோம்
உடலென்ற பற்வைக்கு உணவென்ற இரைதேடி பிரபஞ்சத்தில் சுற்றித்திரிந்தோம்
ஓயாமலிரவு பகலும், ஓராயிரம் கனவுகளோடு ஓடோடி வாழ்வினில் இன்பந்தேடி அலைந்தோம்
உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது வேறென்ன பகிர்ந்துண்டு வாழும் தத்துவம்தனை அறிந்தோமா?
ஒருபயனடைந்திடவே பலதவறுகள் செய்தே பேராசையிலே பொய்மையிலே திரிந்தோம்
தனதென்ற தானெனற பந்தபாசங்களெனும் வலையினிலே சிக்குண்ட பறவைகளானோம்
தாயென்ற தாய்மையை வீதியிலே எறிந்து வேடிக்கைப் பார்த்தோம்
சேயென்று பாராது தம்கருத்தை திணித்து செயலற்று போகவே காரணமானோம்
நீயென்று விலக்கி உயர்வென்று சொல்லி பிறரை தாழ்வுக்குள் தள்ளினோம்
நானென்று சுய நலத்தில் அதிகாரம் செய்து அடுத்த்வரை கொச்சைப் படுத்தினோம்
இடையென்று எதையெதையோ எண்ணி ஏமாந்துபோய் விட்டோம்
கடைநின்று விழிப்பின்றி எழுந்திடாமல் வீழ்ச்சியுற்று வீதியினிலே கிடந்தோம்
ஏனென்று கேளாது போராட்ட குணமின்றி தாழ்வுற்று தரித்திரமானோம்
மக்கள்ஜன நாயக புரட்சியின்றி தனியுடைமை கொடுமையிலே கருகிக் கிடக்கின்றோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment