கண்ணினொளி பாய்ந்ததடி காதல்மணம் புரிந்ததடி கன்னிமனம்
கருத்தறிந்து கொண்டதடி அன்புசுமை கொண்டதடி விடியவிடிய தனிமையிலே
விண்ணொளி கண்டதடி இன்பவேதனை தந்ததடி
கனவுகண்டது போலெனக்குக் காட்டிமறைந் தேபோனவன்தான் யாரடி?!
நினைவை நெஞ்சினில் வைத்து நினைத்தவன் யாரடி?
ஆரென்று கேட்டவனே அருகில்வந்து கண்டவனே யாரடி?- இளமாலைப்
பாரென்று சொன்னதுவும் பகுத்தறிந்து பாவைமனதுள் நுழைந்தவனே யாரடி
நினைக்குந் தினந்தோறும் நிறைந்த காதலின்பத்தை
அணைக்குள்ளே கண்டுகொண்டு புன்னகை முத்துதிர்த்த கள்வன் யாரடி?
இன்னதென்று சொல்லவொண்ணா வெல்லையற்ற பேரின்பத்தை தந்தவன் யாரடி? வாழ்தத்துவத்தை
சொன்னவனை நானறிந்து சொல்வதினி என்ன உண்டு இந்த பிரபஞ்சந்தன்னிலே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment