அவளின்
தாமரைக் கண்களோடும்,
செங்கனிவா யொன்றி னொடும்
செல்கின்ற தென்நெஞ்சமே
அவளின்
அன்பின் சிந்தையோடும்
அறிவிலொன்றி காதலோடும்
பறக்கின்றது என் நெஞ்சமே
அவளின்
சமத்துவ தத்துவத்தோடும்
ஆணாதிக்க எதிர்ப்போடும்-துணை
நிற்கின்றது என் நெஞ்சமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment