Popular Posts

Thursday, November 26, 2009

இம்மனமும் அந்த மாயனின் முன்னே போகாமலே இருப்பதுதான் - எந்தவிதமோ? எந்தவிதமோ? -இது எந்தவிதமோ? அதுதான் எந்தவித மாயமோ?

அன்னம்தனை தூதுவிடுத்தேனே அன்னந்தான் அங்கு என்காதலன் அவனையே
இன்னம்தான் கண்டு அறியாது வந்ததே தோழியே

அப்பால் ஓர் வண்டை அனுப்பினேனே அவனிடத்து என்காதலை சொல்லாதே
அப்பால் நின்று திகைத்ததே! - தவறாது

மானைப் போய்த் தூது சொல்லி வா என்றேனே அதுதன் இணையைத்தேடி ஓடித்
தானெங்கோ காட்டுவழி போனதே-என் தோழி

ஆரணங்கை நான் தூது அனுப்பினேனே அப்பாவையும் தன்காதலன் வசம்
ஆகி காதலிலிலே மூழ்கிப்போனாளே - ஆகையினால்-
எந்தவிதமோ? -இது எந்தவிதமோ? அதுதான் எந்தவித மாயமோ?
என்னிதய சாம்ராஜயத்தின் காதல் தலைவனிடமே!
இந்த மனத்தைத் தூதாய் போய்வா நீஎன்றேனே! இம்மனமும்
அந்த மாயனின் முன்னே போகாமலே இருப்பதுதான் - எந்தவிதமோ?
எந்தவிதமோ? -இது எந்தவிதமோ? அதுதான் எந்தவித மாயமோ?

No comments: