எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றுவாழும் பொதுவுடைமை நல்லுலகினைப் படைப்பதற்குப் போராடுதல் மிகவினிதே!
முத்தான முறுவலாள் சொல் இனிது;
சத்தான தமிழ்பேசும் தேனிசை இனிது
மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும்
ஒன்றுபடக் கூடுமின்ப மனை வாழ்க்கை இனிது. .
'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.
அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.
மழலைச் செல்வங்களாம் அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது.
அறிவுடையவர்கள் வாழுகின்ற ஊரில் வாழ்வது இனியது.
அறநூல்படி வாழும் முனிவர்களின் பெருமை இனியது.
தாய் தந்தையரைக் காலையில் கண்டு வணங்குதல் இனிது.- நாட்டினிலே
வஞ்சகர்களை நீக்குதல் இனியது.
அறிவுடைய பொதுவுடைமைத் தத்துவஞானியர் வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது.
பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.
மாட்சிமை இல்லாத தனியுடைமை அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.
வளமான சோலையுடன் கூடிய உலக நதிகளையே இணைத்தல் இனிது.
தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது , தாழ்வுற்று அடிமைப்பட்டு வாழாது உரிமைக்கு போராடி ஜெயித்து வாழ்தல் இனிதாகும்.
எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.
பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.
எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றுவாழும் பொதுவுடைமை நல்லுலகினைப் படைப்பதற்குப் போராடுதல் மிகவினிதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment