Popular Posts

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/களையே முளைக்காத மண்ணுமில்லை!தவறு களையே செய்யாத மனிதருமில்லை!

துரும்புகள் போலவே தவறுகளே மேலே மிதந்து வருமடா!
முன்னிரவில் உன்சொந்தத் தவறுகளை நினைத்திடவே வேண்டுமடா!
பின்னிரவில் பிறர்செய்த தவறுகளை நினைத்துப் பார்த்திடவேண்டுமடா!
களையே முளைக்காத மண்ணுமில்லை!தவறு
களையே செய்யாத மனிதருமில்லை!

பிறரது தவற்றுக்கு சமாதானங்கள் கூறினாலும் தன் தவற்றுக்கு சமாதானமே
கூறிடவே கூடாது!
தவறுவது என்பது இயல்பாகுமே!ஆனாலதையே அடுத்தவரின்
தவறாய் ஆக்கிடுவது என்பது போலி அரசியலாகுமே!பிறரின்
தவற்றை அறிந்து தன் தவற்றை திருத்துபவனே அறிவாளி!
தவறு என்பது கதவு இடுக்கினில் கூட நுழைந்து விடுமே!
களையே முளைக்காத மண்ணுமில்லை!தவறு
களையே செய்யாத மனிதருமில்லை!
அறியாமை என்பது வெற்றுக்காகிதமடா
அதைக்கிழித்து விட்டுத்தான் எழுதவேண்டுமடா!
தவறு என்பது கிழிக்கப்பட்ட காகிதமடா!
அதை அழித்துவிட்டுத்தான் எழுதவேண்டுமடா!
தவறு நேரிடவில்லை
தவறு நேர்ந்ததுமில்லை
தவறு நேரிடவும் நேரிடாது-என்று
யாரும் இந்த உலகினில்
அரிதியிட்டு கூறிடவே முடியுமா?
உனது எதிரிகளை முதலில் கவனித்து பாரடா! ஏனென்றால்
உனது எதிரிகள் தான் முதலில் உனது தவறுகளை கண்டுபிடித்து கூறுவாரடா!

No comments: