ஏ! சுறுசுறுப்பான தேனீயே!
உந்தனுக்கு ஓய்வெடுக்கக் கூட நேரம் என்பது இல்லையோ?
உனைப் பார்த்தும் பலமனிதர் இன்னும் சோம்பலிலே இருப்பதுதான் ஏனோ?
அந்த புத்திகெட்ட மனிதரை நீயும் நாலுகொட்டு கொட்டினாலும் புத்திவரக் காணோமே?
அந்த எறும்பப் பார்த்தும் சேமிக்கத் தெரியாத மனிதரும் மண்ணில் உள்ளாரே!
அந்த உடும்ப பார்த்தும் உறுதி இல்லாத மானிடரும் உலகினில் உள்ளாரே!
அந்த புத்திகெட்ட மனிதரை இன்னும் எதைத்தான் சொல்லித் திருத்திடவோ?
தமிழ்பாலா -/கவிதை/காதல்/அனுபவம்/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment