ஒரே ஒருமரணமே ஒருசோக நிகழ்ச்சியாகுமே!
ஒருமில்லியன் மரணங்களே புள்ளிவிவரமாகுமே!மரணத்தின்
அமைதி இல்லாத மரணமே முதுமையானதே!மரணத்தைதவிர
எல்லாவற்றுக்கும் மருந்துண்டு இந்த பூவுலகினிலே!
மரணத்திற்குக் கூட லஞ்சம் கொடுக்கும் தட்டுக்கெட்ட உலகமடா!உன்
மரணத்திற்குப் பின்னே உனக்கு கடன் என்பது இல்லையடா!
வாழ்க்கையின் முன்னறிவிப்பே மரணமானதே!--இனியும்
சாகாமல் இருக்கவே - நாம் தினந்தோறும்
சாகின்றோமே!மரணமே
நாள்,கிழமைக் குறிப்பேட்டினையே பார்க்குமாடா?
ஓடுகின்ற மனிதனே நீ எங்கோதான் ஓடுகின்றாய்-உன்னையும் மரணமே
ஓடிவிரட்டிப் பிடித்துவிடும் தெரியுமா?
ஓ! மனிதனே! உன்வாழ்வின் ஓயாத உழைப்பெல்லாமே!
உனது மரணவீட்டினைக் கட்டுவதற்காகத் தானோ?
மனிதனே நீயும் மண் தானே!
மண்ணுக்கே மீண்டும் நீ செல்வாயே!- நீ
மண்ணிலே வந்தவனே - மீண்டும் நீயே
மண்ணோடு சேர்வாயே!
மண்மீது வாழும் நாளிலே நீயும் மக்களுக்கே நல்லது செய்ய நினைத்தாயானால்!
மக்கள் ஜன நாயகப் புரட்சிப் போராளி வரிசையினில் முன்னணியில் செல்லடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment