காதலியே!
உன்னை முத்தமிட்ட தென்றலையே நானும் முத்தமிட்டேன்-அன்பாம்
இந்த காதலிலே வந்த முதல் முத்தத்திலே!~
இன்ப நந்தவனமே தினம்தினம் மலர்ந்து மணம்வீசுகின்றதே!
உன் நாவினாலே சொல்லாத காதல் மொழிதனையே!
உன்பட்டு இதழ்களினாலே என் நெற்றியினிலே பதித்துவிடு!
உன்னிதழ்கள் ஒன்றொன்றை ஒன்று முத்தமிடுவதற்கே!
அஞ்சித்தான் நாணம் கொண்டு சிணுங்கியதோ?
வடிந்துவிட மனமில்லாத தேந்துளிகளைப் போலவே!
படிந்தது இனிய உதடுகளில் நாள்முழுவதுமே!
நொடிப்பொழுது இனியதோர் சிலிர்ப்பில்
துடித்திடும் என் நெஞ்சின்வழி பாய்ந்தது-உன்முத்தமது
முடிந்தபின்னும் வானமே வசப்பட்ட மாதிரியே!
மதுவினைத் தேடும் குடிகாரனல்ல நான் மாமலரே- நீயும் இந்த
கன்னகிண்ணத்தில் ஒருமுத்தத்தை மட்டும்விட்டுச் செல்லடி!
முத்ததில் மலர்ந்தது மோகமே -அதற்குள்
இளமை இனிமையூட்டுது அன்பு ராகமே!
இனிய அதரங்கள் நான்கு
இளமை இதயங்கள் இரண்டு
அழியாத காதல் ஒன்று அதில்
என்றென்றும் தித்திக்கும் இதழ்முத்தம்!
வரவேற்பு ஒன்றில் வந்தது முத்தம்-பிரியாவிடை
வந்ததில் அதில் தந்தது ஞாபகமுத்தம்-காதல்
நெகிழ்ச்சியில் மலர்ந்தது இனிமை முத்தம்
மறைவினில் தந்தது கள்ளமுத்தம்
கலந்து பரஸ்பரம் களிக்கும் முத்தம்
காதல் முத்தம் இன்பமுத்தம்
துன்பத்திலும் தோய்ந்த முத்தம்
வாக்குறுதி இல்லாத முத்திரையில் முத்தம்-இப்படி
மலர்சிரிப்புகள் பெருமூச்சுகள்
கண்ணீர்துளிகள் ஆயுதமாய் கொண்ட பெண்ணே நீயே!
என்றும் தோல்வியே அடையமுடியாதவளே
காதல் முத்தத்தில் கனிந்த அதரங்களாலே இள நங்கையே எனதருமைக்
காதலியே உன் இளமைவதனம் சிவந்தது மோகத்தினாலா?இல்லை
நாணத்தினாலா?இலை ஆணாதிக்க கொடுமையினாலா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment