Popular Posts

Monday, March 2, 2009

அமைதி என்று திரும்பும்?


யாருமற்ற நிர்கதியாய்-எங்கள்

வயல்களும் தோப்புகளும்

கடல்புரத்து கிராமங்களும்

அமில நெடியினில்

வெடிகுண்டுச் சிதறலில்

அழிவின் விளிம்பிலே-எங்கள்

தேசத்து அப்பாவிமக்களுக்கு-அரக்ககுண

இனவெறியின் தாக்குதலின்

உக்கிரங்கள்

என்றுதணியும் ஈரமற்ற ஈழப்போர்

கண்விழிக்க மனமில்லை

கன்வில் அம்மா

விழித்தால் பீரங்கிச்சத்தம்

வெடிகுண்டின் கோரஒலி

கனவிலும் அதுதானே

காதுகளைத் துளைக்கிறது

துயில்கிற குழந்தைக்கு

துயிலெங்கே?ஓய்வெங்கே?

போர்க்களத்தில் உயிர்விட்டாரே

அன்பு மழலையின் பெற்றோரே-இந்த

விரல்களின் நுனியினிலே

பசிதான் அடங்கிடுமோ

பாலுக்கு வழியில்லை

பசியினிலே உறங்கிடுமோ?

தூங்கியும் தூங்காமலும்

துக்கமில்லாத போரில்லாத

தூக்கத்திற்கான காலமிதுவல்ல

இனவெறிப் போரோ உச்சத்தில்

துயரத்திலும் துன்பத்திலும்

அழுகிறது அழகுக் குழந்தை--இங்கே

ஈழப்பிரதேசத்தின் வசந்தவிடியலை--அது

எப்போதுதான் காணப்போகிறதோ?-உன்

நித்திரைக்கு தூளியேதும் இல்லையடா

துளியூண்டு இடம் போதுமடா-உனது

நிம்மதியான தூக்கத்திற்கு

போர்மேகம் என்று மறையுமோ?

அமைதி வாழ்வுதான் என்றுதிரும்புமோ?

தொப்புள்கொடி அறுபட்டு

பூஒன்று தரைமீது-உன்

சகோதர சகோதரிகள்

தோழர் தோழியர்

உற்றார் உறவினர்

தாயார் தந்தையர்

அனைவரையும் சந்தோசத்தில்

காணும் நாள் தித்திக்கும் நாள்

கண்ணான நாள் எந்நாளோ?இவ்வுலக

ஈழத்தில்

சந்தோசவாழ்வு என்று திரும்பும்?

-

No comments: