பணமே பணமே நீயும் பேசாதே -
பணமே நீயும் பேசத்துவங்கினால்
உலகம் ஏனோ? வாயைமூடிகொண்டதே- நீயும்
உருண்டு உருண்டு ஓடினாய்
பத்து பத்தாய் என்ன? கோடி கோடி பேசினாய்- நீ
உள்ள இடத்தில் இரும்பும் மிதந்தது
நீயும் மன நிறைவும் ஒன்றுசேர்ந்து இருந்ததில்லையே
நீயும் தேவைக்கு அதிகமாக இருந்தாலே
தேவையற்றதை வாங்கிவிட எண்ணமாகுமே!
உன்னை கோடிகோடியாக கொண்டவனும்
எட்டடி நிலத்தினில் ஆழ்ந்திருக்கும் போதினிலே
ஒற்றைத் துணியோடு தானே போகின்றானே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment