மலை ஊத்துல வந்த தண்ணீருக்கு
சாதி,மத,இன,மொழி, பேதமுண்டோ?
தண்ணீருக்கு தேசமுண்டோ?
தண்ணீருக்கு பகையுமுண்டோ?
ஆத்தாகுடி ,அப்பன் குடி
அண்ணன்குடி,தம்பிகுடி
சொந்தம் குடி, பந்தம்குடி
சுற்றம்குடி, எல்லாம்குடி
ஊரும்குடி ,உறவும்குடி
நாடுகுடி, நகரம்குடி
நாட்டுக்குள்ளே தண்ணீருக்கு பேதம் பார்க்கலாமோ?
நாமெல்லாமே ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள் அல்லவா?
எல்லாம் குடி , நல்லாகுடி
மா நில எல்லைகளை களைவோம்-குடிக்கும்
நீரை எல்லார்க்கும் பொதுவாக்குவோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment