Popular Posts

Saturday, August 29, 2009

.மறக்காததேனோ! காதலென்ன காதலருக்கு தூரமானதோ ?அன்புத்தொல்லையும் கூட ஒருபொழுது ..துயரமானதோ? ஊடல் வந்து சேரும்போது இன்ப வேதனையானதோ?..எண்ணி எண்ணி ஏங்கிடும்

.மறக்காததேனோ! காதலென்ன காதலருக்கு
தூரமானதோ ?அன்புத்தொல்லையும் கூட ஒருபொழுது
..துயரமானதோ? ஊடல் வந்து சேரும்போது இன்ப
வேதனையானதோ?..எண்ணி எண்ணி ஏங்கிடும் காலங்களில் கூட அது
விரக்தியானதோ? பிரிவு என்று வந்தபோது என்ன மனங்களென்ன
காயமானதோ?. துணிவுற்ற நெஞ்சங்களின் முன்னாலே என்றும் நேசங்கள்.கருகாததே,பிரிவுத்துன்பம் வந்தபோதே காதல் சுடு
நெருப்பானதோ?.கூடல் கொண்டு கொஞ்சும் வேளை காதல் என்ன? குளிர்
.நீரானதோ? இருமனங்களின் ஒருமனதினில் காதல் ஏற்றிவைக்கும் தீப
ஒளியானதோ?.ஒருவரை ஒருவர் புரியாதபோது காதல் கவிழும் கருமை
.இருளுமானதோ? மனத்தாங்கல் வருகின்ற நெஞ்சத்தில் இதய
வலியானதோ?ஒருமித்த காதலருக்கு தினம் தினம் சந்தோச .வரமுமானதோ?
நடைமுறைக்கு வாராத நேசங்கள் எல்லாமே
கனவானதோ?.மனதிருந்து சொல்லாத காதலென்றும்
..கனமுமானதோ? சேராத காதலரின் மனக்கணிப்பில் காதலென்ன
விதியானதோ? அன்பிருந்தும் இல்லாவிட்டாலும் இல்லறகாதல் அதோ
...கதியானதோ? காதலை வெளிச்சொல்லாத காதலரின் நிலையென்ன?
கேள்விக்குறியானதோ? விளையாட்டாய் நடத்துகின்ற காதலரின் தவிப்பென்ன?
...கேலியானதோ? நல்லகாதலிக்கு நல்ல காதலனின் தரும் காதலன்புதான்
பதிலானதோ? துணிவுக் காதலர்கள் காதல் வென்றிடவே
.
போராடியதோ?காசுக்கு வேசம்போடும் கள்ளக்காதல்
...பொய்யானதே? கால நேரம் பாராது காலமெல்லாம் காதலரே உண்மைக் காதலுக்கே
காத்திருந்ததோ? தேசம் மீது வைக்கின்ற தேசப்பற்றுக் காதலே காலங்காலமானதோ?
...காலமானது கவிதையானது நல்ல கோலமானது பருவக்காதலே எங்கெங்கும்
தேடலானட்தோ?பருவம் உள்ளபோதே தேடாத காதலே
..திரும்பாததோ? ஒருதலையாய் காதலென்பது மிகமிக
சுமையானதோ?. காதலர்கள் காதலுக்கு காத்திருப்பது என்பது சுகமானதோ?
அறிவாலே நேசித்ததோ அன்பாலே
...நெருங்கியதோ?இன்பத்தமிழ்
கேட்டதோ? எழில் கீதம்..ரசித்ததோ? வாழ்க்கைப்
பாட்டானதோ? ஈருடலும் ஓருடலாய் ஓருயிரில் சங்கமித்து
..பழகியதோ?காதல் என்ன
அழகானதோ உண்மைக் காதல்..உயர்வானதோ?
உயிரினில் உயிராகி ஆனந்தமானதோ?

No comments: