’என்னால் சமுதாயத்தை மாற்றமுடியாது ஆனால் ,என்படங்கள் இந்த
சமுதாயத்தைப் பிரதிபலிக்கும்” - நடிகர் கமலஹாசன்
மானுடமே!
உன்னால் சமுதாயத்தை மாற்றமுடியாது என்று ஒதுங்காதே
உனது படைப்புக்கள் சமுதாயத்தை மாற்றும் என்பதை மறக்காதே
உன்சமூகக் கடைமைதனை என்னாளும் மறக்காதே
என்னால் சமுதாயத்தை மாற்றமுடியாது என்று சொல்லாதே!
உனது திரைப்படங்கள் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதை மட்டுமல்ல- நல்ல
நமது சமுதாயத்தை கொண்டுவரும் சமுதாயக்கடமை நமக்குண்டு
அனுபவசாலியே நீயே மாற்றமுடியாது என்று ஒதுங்கிவிட்டாலே
ஆர்தான் பூனைக்கு மணிகட்டுவது என்றுபேசியே ஒரு நூற்றாண்டு
ஓடிப்போய் இந்த தலைமுறையும் அடிமைசமூக அமைப்பினிலே
அன்றாடம் செத்து செத்து பிழைக்கும் வாழ்க்கையில் தவிக்கவேண்டியது தான்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment