வரப்போ வரப்போ தலைகாணி ஆச்சோ?
வாய்க்காலோ வாய்க்காலோ பஞ்சுமெத்தை ஆச்சோ?
வயற்காட்டு மச்சானுக்கு வரகரிசி கொண்டு வாரேன்
வாதா மரத்தடியில குயில்பாடும் பாடும் பாட்டுக் கேட்டேன்
வம்பளக்கும்ஆணும் பெண்ணும் வரப்போரம் கூடக்கண்டேன்
வயற்க்காடெல்லாமே மனையிடமாய் ஆகிவருவதாலே
வயல்வரப்பு தென்றல்சுகம் பறவை ஓசை எல்லாமே-இனி
வரும்காலத்தில் அரிதாகப் போய் அந்த தேனின்பம்
இல்லாமல் போக வயற்பாட்டு மறைந்து போகுமோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment