அக்கா இருக்குற வரைக்கும் தானே மச்சானின் உறவு
அண்ணன் தம்பி உறவெல்லாமே காசாகும் காலமடா!
பத்துவயசுக்கு மேலத்தான் பங்காளினு சொன்னாங்க -
நானுமத நம்பல ஆனாலும் அது
அனுபவத்துல சரியாப்போச்சுடா!
பசிவந்திட பத்தும் பறந்தேபோகுமடா!
பணம் வந்திட பத்தும்மறந்தே போகுமடா!
பதவியும் பவிசும் கண்களை மறைக்குமடா!
கயமையும் துரோகமும் முதுகிலே குத்துமடா!
அஞ்சனக்காரன் முதுகில வஞ்சனக்காரன் ஏறுறாண்டா!
அஞ்சனகாரன் விழிச்சுக்கிட்டா வஞ்சனக்காரன் பாடு திண்டாட்டந்தாண்டா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment