ஆவிதான் போனபின்
ஆவென்று ஆனபின்
அள்ளி இடுவதாரோ?
ஆவ் ஆவென்று பறந்தாலும்
அங்குமிங்கும் ஓடினாலும்
என்னதான் கூடவருமோ?
எவருக்குத்தான் எது சொந்தமோ?
மூச்சின்றி போனபின்னே
முச்சந்தியில் தூக்கிப்போன பின்னே
முற்றுமெந்த உறவுமில்லை
முந்தாணை துணையுமில்லை
மூச்சுள்ள போதினிலே
பேச்சுள்ள போதினிலே
எல்லாரும் வாழும் தத்துவத்தை தந்த
மார்க்ஸ் அய்யா வழி நின்று
மாபெரும் உழைப்பவர் ஆட்சி அமைத்திடவே
போராட்டக் குணம் கொள்ளடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment