பூமரத்தின் பட்டுக் கூந்தல்
மண்ணினுள் அழுதுகொண்டிருக்கும் கண்கள்
விளைகின்ற தானியத்தை ஏற்றிவிடும் ஏணி
விதையின் குழந்தை
மண்ணுக்குள் ஓவியம்
எழுதிடும் மரங்களின் தூரிகை
பூமிவயிற்றினில் வளர்ந்த வைரம்
மரங்களின் நங்கூரம்
சுவாசம் மேலே
இதயம் கீழே
என்றெல்லாம் படித்தேன்
இருந்தும் வேர்பற்றி நான் என்னசொல்லவோ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment