இது கோடிக்கட்டு
கோடிக்காலத்து பயிரு
இது அண்டத்தையே தாங்குமடா!-இன்றோ!
தானடிமையாகி தன்சுதந்திரம் கெட்டு
தறிகெட்டு கிடக்குதடா!
தலைமுறை தலைமுறையாக குரங்கிலிருந்து பிறந்து
தான்வளர்ந்து கோடிகோடி ஆண்டுகளாக
தவழ்ந்து தாவி ஊர்ந்து கூன் நிமிர்ந்து எழுந்து நடந்து ஓடி த்திரிந்து
தானே வளர்ந்து நிற்கும் மனிதனடா!!
மனிதனை மனிதன் சுரண்டிடும் கொடுமை நீக்க மறந்து போனதாலே
மனிதரை மனிதன் இனத்தால் , மொழியால் ,தேசத்தால் ,சாதியால்
பிரித்துவைத்து சூட்சுமம் செய்யும் ஆளும் வர்க்கமே!
தனியுடைமை தத்துவத்தை ஆளவிட்டு வேடிக்கைபார்க்குது ஆளும்
அரசாங்கமே அதைமாற்றும் வரையினில் மானுடமே
உனக்கில்லை ஊனுறக்கம் இல்லையடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment