உன்னை நான்
நேசித்தேன்...காதலாலே
நெருங்கினேன்-உன் தமிழ்மழலைச் சொல்லினை
கேட்டேன் உன்கண்ணில் ஒரு காவியமே
..ரசித்தேன் அன்றாடம் படும்
பாட்டானேன்.இன்ப இலக்கியமாய் நானுன்னை
.பழகினேன் இயற்கை நமக்குத் தந்த காட்சிகளின்
அழகானேன்.உன்னை நேசித்த நாள்முதலாய் வாழ்வில்
..உயர்வானேன் உன் துணையினிலே போராடும் பாதையிலே
ஆனந்தமானேன் காதலின்பம் கூட்டுகின்ற இனிமையானதொரு
..மயக்கமானேன் , முரண்பாடான வாழ்வைவாழும் நாளில்
இன்பமானேன் நல்லோர்கள் சொல்லும் வழி நான்சென்று
..இடருமானேன் உழைப்பாளர் ,உழுபவர்களின் கோஷங்களின்
இரவலானேன்..மக்கள் ஜன நாயகத்தின் உன்னதமானேன்
அணிவகுத்து ஊர்வலத்தில் கடல் அலையாகவே
ஆர்ப்பரித்தேன்..அலைபாய்ந்தேன் பொதுவுடைமைப்
பொன்னுலகினை எதிர்பார்த்தேன்..
வரும் தலைமுறையின் நல்வாழ்விற்காக .ஏங்கினேன்
பொதுவுடைமைத் தேசங்களின் வளர்ச்சியினை பிரமித்துப்
பார்த்தேன்...மக்கள்கலை இலக்கியத்தை என் தலைமுறைக்கு
பரிமாறினேன் எல்லா இலக்கியத்தையும் படித்திடவே அனைத்து நூல்களையும் துணையாக்கி அறிவுத்தேன் குடித்திடவே அலைந்து திரிந்து அன்பாலே
அணைத்தேன்.,அனைத்தையும் படித்தபோதும் மேலும் மேலும் அறிவு தாகமெடுத்து ஓடினேன் அறிவுச்செல்வங்களை படித்து படித்து
.இனித்தேன் , மக்களுக்குச் சொந்தாமானேன் ஆளாக பறந்தேன் அவர்களுக்குச்
சொந்தாமானேன் இவ்வுலகினில் இருக்கும்போதே வாழ்ந்து பார்த்திடுவோம்
பூலோக சொர்க்கமென்றேன்,தத்துவஞானிகளாம் காரல் மார்க்ஸ் வகையறாக்களின்
உறவானேன், கயவர்கள்,தனியுடைமை சிந்தாந்தவாதிகளின் தத்துவத்தில்
..பிரிவுமானேன் ,முரண்பட்டேன் ,அவர்தமை எதிர்த்துப்போராடினேன்
அறிவியலாய் தன்னைவகுத்த மார்க்ஸியமே
நிஜமென்றேன் ,மற்றெல்லாமே நம்மை ஏமாற்றும் ...நிழலென்றேன் சாத்திரங்கள் சதுர்மறைகள்
மந்திரமில்லை மாயமில்லை மூட நம்பிக்கை வேண்டாம் என்றேன்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment