வவுத்துக்கு கஞ்சியுமில்லை
இடுப்புக்கு துணியுமில்லை
இருந்திட குச்சுமில்லை-காலுக்கு
நடந்திட செருப்புமில்லை-இடையில
விலைவாசியும் விசம்போல ஏறிவருகுதே
வேதனையும் மிகவும் கூடி விடுதே
காசுவாங்கி ஓட்டுப்போட்டேன்
மானங்கெட்டு மதிகெட்டேன்
கயவர்களை சிம்மாசனம் ஏற்றிவிட்டு-இன்னைக்கு
கடன்பட்டு உடன்பட்டு
கஞ்சிக்கின்றி அலையுறனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment