வட்டவட்ட சிவந்திப்பூவே
வாடாத மரிக்கொழுந்தே-அடித்
தேடாத பிச்சிப்பூவே-என்
தில்லானா தெம்மாங்கே
கிட்ட கிட்ட வாராம -காதல
கிள்ளி கிள்ளி தாராம
எட்ட எட்ட போறியே - நீயுமென்னை
ஏமாத்த பாக்குறியே
குட்ட குட்ட சிரிக்கிறயே
குங்குமப்பூ சிவக்கிறியே
விட்ட தொட்ட குறையாக -இன்ப
வேதனைய கூட்டுறயே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment