நாத்தரிச்சு நானறியேன்
நடவு நட்டு நானறியேன்
சேத்துக்குள்ள இறங்கிக்கிட்டு
செல்லமுகம் வாடுறனே
வாக்கப்பட்டு போன இடம்
வளமான மண்ணுமில்ல
சோத்துக்கே சிங்கியடிக்கும்
சோதாப்பய ஊரடியோ?
வாதா மரத்தடியில
வார மச்சான் வந்திடவே காணேனே
காத்திருக்கும் பூமனச
காளைமகன் நினைக்கலையோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment