பிறப்பது ஒருமுறை இறப்பது ஒருமுறை
பிறப்புமுதல் இறப்புவரை இடையினில்
இருக்கும் வாழ்வினில் வாழ்ந்துபார்த்திடுவோம்
இந்த மானுடதையே
உடம்பை ஓட்டைத் துருத்தியென்பார்
உடையும் புழுக்கூடு என்பார்-வாழ்வுதன்னை
நீர்மேல் குமுழி என்பார்-இன்னும்
நீர்மேல் எழுத்து என்பார்-தாழ்வு மனப்பான்மையில்
வாழ்வினை வாழத்தெரியாதவர்களின்
சோம்பேறித் தனமான உரைகள் அல்லவா?
பிறப்பும் இறப்பும் இயற்கைதானே -இதை
பேதைமையோடு விரக்தியிலே புலம்புவதாலே
பயனென்ன?வாழ்கின்ற பூமியிலே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment