Popular Posts

Friday, August 14, 2009

அழகில்லை அழகில்லை பொதுவுடைமை இல்லாத தேசமடி அழகில்லை அழகில்லை தனியுடைமை ஆளும் உலகமடி!

அழகில்லை அழகில்லை பள்ளி இல்லாத ஊரே
அழகில்லை அழகில்லை பயிரில்லாத நிலமே
அழகில்லை அழகில்லை பாடு இல்லாத பயிரே
அழகில்லை அழகில்லை பாலர் இல்லாத இல்லமே
அழகில்லை அழகில்லை ப்ண்பில்லாத வாழ்க்கையே
அழகில்லை அழகில்லை அன்பில்லாத பார்வையே
அழகில்லை அழகில்லை பக்தியில்லாத நெஞ்சமே
அழகில்லை அழகில்லை கருணையில்லாத உள்ளமே
அழகில்லை அழகில்லை இரக்கமில்லாத சிந்தனையே
அழகில்லை அழகில்லை மூட நம்பிக்கை பக்தியே
அழகில்லை அழகில்லை நீரில்லாத குளமடி
அழகில்லை அழகில்லை விளக்கில்லாத வீடடி
அழகில்லை அழகில்லை மனம் போன போக்கடி
அழகில்லை அழகில்லை புரண்டுபேசும் நாக்கடி
அழகில்லை அழகில்லை கபடம் நிறைந்த நெஞ்சமே
அழகில்லை அழகில்லை பொய்கூறும் வடி நாவடி
அழகில்லை அழகில்லை கனிதராத மரமடி
அழகில்லை அழகில்லை லஞ்சம் வாங்கும் கையடி
அழகில்லை அழகில்லை மூடன் கொண்ட விரதமடி
அழகில்லை அழகில்லை மூர்க்கம் கொண்ட முகமடி
அழகில்லை அழகில்லை வழிபாடு இல்லாத கோவிலடி
அழகில்லை அழகில்லை சொல்திறனில்லாத அறிவடி
அழகில்லை அழகில்லை வாயில்லாத மனைவியடி
அழகில்லை அழகில்லை நல்சொல்கேளாத பிள்ளையடி
அழகில்லை அழகில்லை மழலையில்லாக் குடும்பமடி
அழகில்லை அழகில்லை விதவை மறுமணம் இல்லாததடி
அழகில்லை அழகில்லை தனிமையான வாழ்க்கையடி
அழகில்லை அழகில்லை ஈயாதார் செல்வமடி
அழகில்லை அழகில்லை முயற்சி இல்லாத வாழ்க்கையடி
அழகில்லை அழகில்லை உய்ந்துணர்ந்து கற்றுத்தராத கல்வியடி
அழகில்லை அழகில்லை ஊக்கமில்லாத உழைப்படி
அழகில்லை அழகில்லை ஏற்றமில்லாத வாழ்க்கையடி
அழகில்லை அழகில்லை வருவாய்க்கு மிஞ்சிய செலவடி
அழகில்லை அழகில்லை அகந்தைகொண்ட எண்ணமடி
அழகில்லை அழகில்லை ஆற்றல் இல்லாத வீரமடி
அழகில்லை அழகில்லை கோழையின் கைவாளடி
அழகில்லை அழகில்லை வெற்றிகாணாத வெற்றுத்திட்டமடி
அழகில்லை அழகில்லை கலையில்லாத சிலையடி
அழகில்லை அழகில்லை கண்ணில்லாத முகமடி
அழகில்லை அழகில்லை கருத்தில்லாத நூலடி
அழகில்லை அழகில்லை பொதுவுடைமை இல்லாத தேசமடி
அழகில்லை அழகில்லை தனியுடைமை ஆளும் உலகமடி

No comments: