பத்து வயதினில் விசித்திரக் குழந்தை
பதினைந்து வயதினில் கெட்டிக்கார இளைஞன்
இருபதிலே சாதாரண மனிதன்
வாலிபத்தில் காரணமின்றி துள்ளாதே
வயதான காலத்தில் வருந்தாதே
வாலிப வயதிலும் வெள்ளைத்தாளிலும்
எதை எழுதினாலும் பதிந்துவிடுமே
இளமையில் செயல்பட வேண்டும்
இளமையொரு ரோஜாமாலையாகும்
இந்த உலகம் இளைஞருக்கு உரியது அல்லவா?-மென்மையான
இளமைக் களியில் எந்த உருவமாகவும் பிடிக்கலாமே!-மதுவின்றி
இளமைவெறி கொள்ளும் வாலிபமே!
காலை நேரம் இருக்கும்போதே
காலைமலர்களைப் பறிக்கவேணும்
இளமை இருக்கும்போதே சாதனை படைத்திடவேணும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment