ஆசைக்கடலில் துரும்பானேன்
அக்கினி வேள்வியில் எறும்பானேன்
சாண்வயிற்றுக்கு சோறிடவே படாத
பாடுபட்டு மெலிவானேன்
பொய்யை மெய்யென்றேன்
மெய்யை பொய்யென்றேன்
நல்லத்தை கெட்டதென்றேன்
கெட்டதை நல்லதென்றேன்
கையூட்டுக்கு துணையும் போனேன்
கயவர்செய்யும் தீமையை பாராதிருந்தேன்
உழைப்பவர் உரிமையினை பறிக்கப்பார்த்திருந்தேன்
என்னை அடிமையாக்கி ஆள்பவரை வீழ்த்தாதிருந்தேன்
தனியுடைமை சமூக அமைப்பை மாற்றாதிருந்தேன்
இனியொரு விதிசெய்வேன் ஏற்றதாழ்வில்லாத சமுதாயத்தை
உருவாக்கும் நல்லோர்வழி நானும் நடக்கின்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment