சுதந்திரமாம் சுதந்திரம் உயிர்மூச்சுக் கொடுத்த சுதந்திரம்
சுதந்திரமாம் சுதந்திரம் உரிமை தந்த சுதந்திரம்
சுதந்திரமாம் சுதந்திரம் அடிமைப் பட்ட வாழ்க்கையை
அழிக்கவந்த சுதந்திரம் ஆக்கம் தந்தசுதந்திரம்
சுதந்திரமாம் சுதந்திரம் அத்யாவசிய தேவைகளை
பூர்த்தி செய்யும் சுதந்திரம் விலைவாசி இல்லாத
சுதந்திரமாம் சுதந்திரம் எல்லோருக்கும் எல்லாமும்
கிடைக்கின்ற சுதந்திரம் வறுமையில்லாத நாட்டையே
உருவாக்கும் சுதந்திரம் தனியுடைமை அழிக்கவந்த
சுதந்திரமாம் சுதந்திரம் இல்லாரே இல்லாத
பொன்னான சுதந்திரம் பொதுவுடைமை உலகத்தையே
உருவாக்கும் சுதந்திரம் சுதந்திரமாம் சுதந்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment