எத்தனையோ ? எத்தனையோ?-
அண்டங்கள்
எத்தனையோ?
அதிலுள்ள உயிர்கள் எத்தனையோ?
அத்தனையும் அந்தரத்தில்
ஆடியாடிக் கொண்டாடி
அளவின்றிக் கொண்டாடி
அளவின்றி விளையாடி
இன்பத்திலும் துன்பத்திலும்
துணையிலும் தனிமையிலும்
வாழ்கின்றது எத்த்னையோ
வளர்கின்றது எத்தனையோ?
தளர்கின்றது எத்தனையோ?
தாழ்கின்றது எத்தனையோ?
எல்லைக்குள் எத்தனையோ?
எல்லையின்றி எத்தனையோ?
உயிர்துடிப்பிலே எத்தனையோ?
உருவானது எத்தனையோ?
கருவானது எத்தனையோ?
கருகிப்போனது எத்தனையோ?
கனவானது எத்தனையோ?
நனவானது எத்தனையோ?
அறிவானது எத்தனையோ?
அறியாமை எத்தனையோ?
அன்பானது எத்தனையோ?
உயர்வானது எத்தனையோ?
தாழ்வானது எத்தனையோ?
அன்பானது எத்தனையோ?
அன்பில்லாதது எத்தனையோ?
அண்டங்கள் எத்தனையோ?
அதிலுள்ள உயிர்கள்தான் எத்தனையோ?
சித்தமானது எத்தனையோ?
சித்த்ம்கலங்கி எத்தனையோ?
சிரித்த்து எத்தனையோ?
அழுதது எத்தனையோ?
போரானது எத்தனையோ?
சமாதானம் எத்தனையோ?
புரிந்தது எத்தனையோ?
புரியாதது எத்தனையோ?
எத்தனையோ? எத்தனையோ?
அண்டங்கள் எத்தனையோ
அதிலுள்ள உயிர்கள்தான் எத்தனையோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment