Popular Posts

Monday, August 17, 2009

உண்மைக் காதலென்றும் உதிர்ந்துவிடப் போவதில்லை இல்லை!!

காதலியை பாவித்த விதத்தில்
காதல் மனைவியை பாவிக்க மறுப்பதாலே-அந்த
முட்டாள்தனமான முடிவினாலே ,பிரிவினாலே
இன்று அவர்களின் காதலில் லயிப்பு என்பதில்லை
கடமை உணர்வுதான் ;இருக்கிறது-இதை
கவனிக்காமல் ;விட்டுவிட்டாலோ உண்மைக்
காதல் காணமல் போய்விடுமே
உண்மைக்
காதலுக்கு கால எல்லைகள் இல்லை இல்லை
உருவமாற்றத்திலோ? அது
உறவாகி விட்டதாலோ!-அல்லது
உறவின்றி போனதாலோ!-உண்மைக்
காதலென்றும் உதிர்ந்துவிடப் போவதில்லை இல்லை!

No comments: