காக்கையாரே வந்தாராம் கா காவென்றாராம்
காலைவரவைக் கூறினாராம் கா கா வென்றாராம்
நாவல் மரத்தில் ஏறினாராம் கா கா வென்றாராம்
நல்ல பழத்தைத் தந்தாராம் கா கா வென்றாராம்
வேப்பமரத்தில் ஏறினாராம் கா கா வென்றாராம்
விருந்துவருகை கூறினாராம் கா கா வென்றாராம்
கூட்டுக்குரலில் கூவினாராம் கா கா வென்றாராம்
கூடிவாழ்ந்து காட்டினாராம் கா கா வென்றாராம்
கூடிவாழச் சொன்னராம் கா கா வென்றாராம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment