தமிழ்பாலா
எனது புனைபெயர்,எனது பெயர் பாலசந்திரன்,எனது மகள் தமிழ்செல்வி நினைவாக இந்த வலையில் நல்ல இலக்கியங்களை எழுதுவதற்கு முயற்சித்து வருகின்றேன், நான் மதுரையில் பிறந்தவன்,உயர்கல்வி சேதுபதி உயர் நிலைபள்ளி,கல்லூரி நாகமலை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி,கடந்த 25 வருடங்களாக மில்வேலை மதுரைகோட்ஸ் செண்டினரி மில்லில் வேலை பார்த்து விருப்ப ஓய்வில் இருக்கிறேன், அரசு உரிமம் பெற்று பத்திரம் எழுதி வருகிறேன்,எனக்கு திருமணம் ஆகி மனைவி,இரண்டு மகன்களோடு மதுரையில் வசித்து வருகிறேன், மக்களுக்கான கலையினை மக்களுக்காக கொண்டுவர ஒரு போராட்டம் நடத்திகொண்டு இருக்கின்றேன்,வாசிக்கும் பழக்கம் எனது தாயாரால் ஏற்பட்டது, அடிக்கடி மதுரை சிம்மக்கல் நூலகத்திற்கும்,எல்லிஸ் நகர் சிங்காரவேலர் நூலகத்திற்கும் சென்று படித்தும், நூலகளை எடுத்துவந்து வாசிக்கின்ற பழக்கம் உண்டு,மேலும் நல்ல இலக்கியங்களை படித்து நல்ல இலக்கியங்களை படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் கடைசி மாணவனாக இருந்து நல்ல படைப்புகளை படைக்க விரைந்து ;வந்துகொண்டிருக்கிறேன்
No comments:
Post a Comment