கயிறு கயிறு பலவிதமான
கயிறு கயிறு
வாலுப்பையன் பட்டம் விடுகிற நூலுக்கயிறு
நாம ரகசியமா தாயத்துக்கு அவசியமா இடுப்புக்கயிறு
ஊரு உபத்திரவம் தாங்காமலே ஊரவிட்டு காசிபோக
உத்திராட்சம் சேர்த்த காவிக்கயிறு மந்திரிச்ச
சிகப்புக்கயிறு தூய்மையான வெளுப்புக்கயிறு
காலமெல்லாம் கதைசொல்லும் கட்டில்கயிறு-ஆயிரங்
காலத்து பயிரினையே தாலாட்டும் தொட்டில் கயிறு
காளைமாட்டு க் கழுத்தில் கட்டுகிற கழுத்துக்கயிறு
அந்தகயிறு இந்தகயிறு ஆசைக்கயிறு பாசக்கயிறு
எந்தகயிறு கேட்டாலும் விற்கிறவரு மறுப்பதில்லை
இந்த தாலிக்கயிறு மட்டும் கடன்கேட்பதுமில்லை
கடன்கொடுப்பதும் இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment