காலத்திற்கும் காலமுண்டு- ஆனால்
காதலுக்கு காலமில்லை
காதலுக்கு மருந்துமில்லை
காதலர்க்கு மருத்துவனில்லை
காதலின் உச்சத்தில்-காதலர்
பேச்சும் குறைந்துவிடும்
காதலதனை புதுப்பிக்கும்
காதலரின் சிறு ஊடலே
வானத்தில் பறவையின்
பாதையும் ;தெரிவதில்லை
காதலர்க்கு பூமிதன்னில்
காரணமும் புரிவதில்லை
காதலர்க்கு முத்தங்கள்
காதலதின் திறவுகோலாகும்
காதலரின் கடிதங்களுக்கு
தேதியொன்றும் தேவையில்லை
காதலரின் கோபமும் பொய்மையே
காதலுக்கது புத்துயிராகும்
காதலரின் தூதுவர் கண்களே
காதல் தானே காதலுக்குப் பரிசாகும்
காதலர்தானே காதலுக்கு வித்தாவர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment