புதுக்கவிதையின் நதிமூலமே !எம் ஆசாண் பாரதியின்
வசனகவிதையே அல்லவா?-
இலக்கணம் மீறவில்லை
இலக்கணத்தின் சிம்மாசனமேறி --புதிய
இலக்கியப் படைப்பல்லவா?-
அய்யா பிச்சமூர்த்தி சுவடுகளில்
மவுனியின் அடிதொற்றி
காமராசன் ,செல்லப்பா,மீரா,இன்னும் எத்தனையோ-மக்கள்
கலைஞர்களின் வழியினிலே
ஆலவிருட்சமாய் வேர்விட்ட
புதுயுகக் கவிதையே உன்னை நான் வணங்குகிறேன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment