காலமற்ற காலவெளியில்
காலத்துவக்கம் என்பதும் முடிவும் என்பதும்
காலத்தில் நகர்கின்ற புள்ளிகளாகுமே!-துவங்கும்
காலப்புள்ளி இருந்து மறுபுள்ளிபார்த்தாலே
காலத்தின் முடியும் புள்ளி முதலாகுமே!
கால முடிவின் புள்ளியிருந்து முதலைப் பார்த்தாலே
காலத்துவங்கும் புள்ளியே முடிவாகுமே!
காலமரணம் என்பது இன்னொரு பிறப்பான ஜனனம்!
காலமுடிவு என்பது இன்னொரு ஆரம்பதுவக்கமே!
காலசுத்த வெளியே
காலத்தில் ஒவ்வொன்றையும் அசைவிக்குமே ஆட்டுவிக்குமே!
காலத்தை மாற்றுவிக்குமே!
காலமது அழிப்பதில்லையே சிதைப்பதில்லையே!
காலசுத்தவெளி தன்னைத் தானே அழிப்பதில்லையே!
சிதைப்பதில்லையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment