சிற்றிதழ்களே சிற்றிதழ்களே !
சிறுதுளிப் பெருவெள்ளங்களே!
சின்னஞ்சிறு புள்ளிகள் கூடினால் கோலங்களாயிடுமே!
சிற்றுளி சிறுகல்லை செதுக்கினாலே காலங்காலமாகவே!
அழியாத கலையாகி நின்று நிலைத்து நின்றிடுமே!
சிறு அணுவும் பிளந்தால் பெரும் பிரளயமே உருவாகிடுமே!
சிற்றிதழ்களே சிற்றிதழ்களே !
சிறுதுளிப் பெருவெள்ளங்களே!-
நேற்று விழுந்த மழையினில் !
இன்று முளைத்த காளான்கள் அல்ல !
மண்ணின் வரலாறு பண்பாடு!
இணைத்த ஒரு நெடும் சங்கிலியின் கண்ணிதான்!
சிற்றிதழ்களே சிற்றிதழ்களே !
சிறுதுளிப் பெருவெள்ளங்களே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment