Popular Posts

Monday, September 14, 2009

பெண்களைப் பழிக்கும் ஊடகப்பார்வைகள்! முள்மீது சேலை சேலைமீது முள்” எதுவிழுந்தாலும் அந்த சேலைக்குத் தானே சேதாரம்! பெண்களை செய்தியால் சேதப்படுத்தும் கலாச

பெண்களைப் பழிக்கும் ஊடகப்பார்வைகள்!
முள்மீது சேலை சேலைமீது முள்” எதுவிழுந்தாலும்
அந்த சேலைக்குத் தானே சேதாரம்!
பெண்களை செய்தியால் சேதப்படுத்தும் கலாச்சார
சித்தரிப்பு சிதைவுகள்!
கள்ள்க்காதல் “ உறவில் கணவனைக் கொன்றவள்”
கள்ள்க்காதல் “ உறவில் குழந்தையைக் கொன்றவள்”
”மண நாளன்று காதலனோடு ஓடிபோனவள்”
”ஒரே பெண்ணிற்கு போட்டிபோட்டு வாலிபர்கள் கொலை”
இந்த சித்தரிப்புகள் எல்லாம் பெண்கள் எல்லாமே
எல்லைமீறிப் போவதாய் சித்தரிக்கும் இழிவுகள்!
------இதனால் தான்
பெண்களை வீட்டிற்குள் பூட்டிவைக்கச் சொன்னோம்
என்று புலம்பிடும் பழம்பஞ்சாங்கிகள்!
----------இவைகளுக்கு தூபம் போடும்
ஆபாசப் படமெடுத்துக் காட்டும் வக்கிர ஊடகங்கள்!
ஒட்டுமொத்த பெண்களில் ஒருசதவீதம் கூட இல்லாத
மாடல்களையும் நடிகைகளையும் வக்கிரமாய் படம்பிடித்துக் காட்டும்”
பணம்பண்ண நினைக்கும் ஆண்கள்!
டிவி நடிகைகள் கூட பாலியல் தொல்லைகளால் பலபெண்கள்
தற்கொலை செய்துகொண்ட சோகக் கதைகள்
ஆண்களின் அற்ப ஆசைகளால் பழிக்கப்படுவோர் எல்லாம் பெண்களாய்
இருப்பதுதான் அவலம்!
பெண்களை கீழ்த்தரமாய் ரசிக்க நினைக்கும் மைனர் குணாம்சத்தால் பெண்கள் பலர் இரையாக்கப்படும் எதார்த்தங்கள்!~
பெண்களை மானுடமாய் பார்க்காத அவலங்கள்!
மனதுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் வக்கிர கணவனோடு வாழ்ந்தே தான்
ஆடவேண்டும் என்ற கொத்தடிமை குணாம்சங்கள்!
வறட்டுக் கவுரவம் திணிக்கப்பட்ட அடிமட்ட விஷக் கலாச்சாரம்!
பெண்களை ஆணாதிக்கப் போகபொருளாய் நடத்தும் சீரழிவு
ஆணாதிக்க வெறி இன்னும்
அடக்கப்படாத திமிறுகள்!
இவைகளையெல்லாம் பற்றி விவாதிகாமல் பெண்களைப் பற்றிய
செய்திகளை மட்டும் கிளுகிளுப்பு ஊட்டி எழுதும் நச்சு ஊடகங்கள்!
பெண்களை மோசமானவர்களாய் ,அடங்காதவர்களாய் ,போகப்பொருளாய்
சித்தரிக்கும் ஊடகப் போக்குகள்!
பெண்ணுரிமை என்ற பெரும் கோட்பாட்டுப் போராட்டத்தை தடுக்கும் தடைக்கற்கள்!---இவற்றைத் தகருங்கள்!
பெண்கள் செய்யும் குற்றங்கள் ,பெண்கள் மீதான குற்றங்கள்,
----------------இவைகளை நுணுகி ஆராய்ந்து அவற்றின் உட்பொருளை அம்பலப்படுத்துங்கள்! அதுவே காலத்தின் கட்டாயமாகும்!

No comments: