க்யூபாவில்
”அனைவருக்கும் வேலை
அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் சமத்துவம்”
என்ற முழக்கம் மட்டுமல்ல--
செயலிலும் எதிரொலிக்கிறதே!
காஸ்ட்ரோவின் சோசலிச வழிகாட்டுதல்
வீரதீரச் செயல்களின் அடையாளமாகவே!
புயலையும் எந்த சுனாமியின் தாக்குதலையும்
கம்யூனிஸ்டுகள் சந்திப்பார்களே!
என்பதற்கு முன்னுதாரணமான மார்க்சீய படைத்தளபதிகள்
செகுவேரா” பெடரல் காஸ்ட்ரோ”
மகத்தான தோழமை உணர்வுக்கு உவமானத்தோழர்கள் உழைப்பிற்கு
உன்னதமான பலனாய் க்யூபாவின் முன்னோக்கிய பொதுவுடைமைப் பொன்னுலகப் பயணம் இன்னும் முன்னோக்கி முன்னோக்கிச் செல்லட்டும்!
பொருளாதாரத்தில் க்யூபா பின் தங்கியபோது
தோழமை உணர்வோடு தோளோடு தோள்கொடுத்தது!
சோவியத் யூனிய நண்பனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment