Popular Posts

Saturday, September 19, 2009

புதுக்கவிதை மட்டுமல்ல புதுயுகக் கவிதை நான்

கோடிஆண்டுகளின் கொண்ட
மூத்த அனுபவத்தின் தொடர்ச்சி நான்!
-என்னை
இலக்கணம் மீறியவன் என்று சொல்கிறார்கள்!
-அது சரியல்ல-பழைய
இலக்கணத்தை அடித்தளமாக்கி-புதிய
இலக்கணங்கொண்டு புத்திலக்கியமாய் -புதிய
இலக்கினை நோக்கி புறப்பட்ட புதுயுக
இலக்கிய சாம்ராட் நான்!- என்னை எல்லோரும்
புதுக்கவிதை என்று சொல்கிறார்கள்! - நான்
புதுக்கவிதை மட்டுமல்ல
புதுயுகக் கவிதை நான்
யுகயுகமாய் மக்கள் கலையாய் பரிணமிக்கும்
மக்களுக்காக படைத்து மகிழும்
யுகப்பயணி நான்!

No comments: