ஏலே ஏலே சின்னப்பயலே ஏழுருண்டை தின்னிப்பயலே!
வாலே வாலே வாலிபப் பயலே வரகரிசித் தின்னபயலே!
குண்டுசட்டி வவுத்துப் பயலே கொண்டுவாடா உன்பாட்ட!
ஏண்டி ஏண்டி குமரிப்புள்ள ஏழுவீட்ட சுத்துன புள்ள!
வாடி வாடி வாயாடிப் புள்ள கூழுத்தண்ணி குடிச்ச புள்ள!
கம்மந்தட்டை கும்மலுக்கும் கலுங்குதண்ணி எரச்சலுக்கும்!
இருளாயி தாலாட்டுக்கும் இழுத்துபோடு தெம்மாங்கு!
வட்ட வட்டமாம் பாறையிலே வரகரிசி தீட்டையிலே!
நான்கொடுத்த சாயச்சேலை ஆலவட்டம் போடுதடி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment