பொதிகைமலைத் தென்றல் வந்து என்னைத் தொட்டு தொட்டு மணங்கொடுக்கும்
புன்னகையில் பொன்மாலையில் செவ்வானம் சிவந்து சிவந்து முகஞ்சிரிக்கும்
அதிகாலைப் பனிமழையில் தினமொரு புதுக்கவிதை எழுதி எழுதிப் படிக்கும்
சித்திரமாய் வானில் கூட்டமாய் பறவைகளே சிறகடித்து அழகழகாய் பறக்கும்
இத்தனையும் துணைக்கிருந்தும் என்ன பயன் சொல் தோழி என் தலைவன் எங்கே?
இயற்கை அத்தனையும் சேர்ந்தபோதும் என் தலவனுக்கு ஈடில்லையே என்செய்குவேன் தோழி அவன்வரவு நோக்கும் என்விழிகளும் சிவந்தனவே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment