சீரகமோ சிறுசெடியோ?--என்கண்ணே
சீமை எங்கும் வாசனையோ?
சித்திரமே சிங்காரமே -என் பொன்னே
சீர்கொண்ட ஒய்யாரமே
பேரின்பமே இன்னுயிரே-என் கண்ணே
பிரியாத ஆசைக் கனியே
கண்ணழகே மண்வளமே-என் விண்ணே
விண்மீனே வித்தாரமே
அன்பான ஆருயுரே-என் பண்ணே
அழகுருவே தென் தமிழே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment